Aa Ambara Umbara

Artist: | Albums:



Lyrics in English

Aa! Ambara umbara mumbugazhundhiru
Aadhiban pirandhaar
Aadhiban pirandhaar
Amalaadhiban pirandhaar

1.Anbaana Paraney, Arul Mevung Kaarananey
Nava Atchaya Sachidha Ratchaganaagiya
Utchidhavaraney -- Aa Ambara

2.Aadham Paavamara, Needham Niraivera - Andru
Alliraavinil Vellaiyadiyinir
Pullanaiyir Pirandhaar -- Aa Ambara

3.Gnaaniyar Theda, Vaanavar Paada - Miga
Nannaya, Unnadha Pannaru Mesaiyaa
Innilam Pirandhaar -- Aa Ambara

4.Konavar naada, Dhaanavar Kondaada - Endu
Kotthirar Thotthiranj Saatridavey Yoodha
Kotthiran Pirandhaar -- Aa Ambara

5.Vinnudu Thona, Mannavar Pena - Yerodhu
Maindhanin Sindhaiyazhundhi Kalangida
Vindhaiyaay Pirandhaar -- Aa Ambara


Lyrics in Tamil

ஆ அம்பர உம்பர புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார்
அமலாதிபன் பிறந்தார்

1. அன்பான பரனே ! அருள் மேவுங் காரணனே
நவ அச்சய சச்சித ரட்சகனாகிய
உச்சிதவரனே -- ஆ

2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற - அன்று
அல்லிராவினில் தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார் -- ஆ

3. ஞானியர் தேட, வானவர் பாட - மிக
நன்னய உன்னத பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார் -- ஆ

4. கோனவர் நாட, தானவர் கொண்டாட - என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே யூத
கோத்திரன் பிறந்தார் -- ஆ

5. விண்ணுடு தோண, மன்னவர் பேண - ஏரோது
மைந்தனின் சிந்தையெழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் -- ஆ



;